காதலி கண்முன்னே காதலன் தற்கொலை

அம்பத்துார்: காதலியின் கண்முன்னே, காதலன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அம்பத்துார், மண்ணுார்பேட்டை, நேரு நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ், 25. இவரது பெற்றோர், நேற்று முன்தினம்

உறவினர் துக்க நிகழ்வில் பங்கேற்க சென்றுள்ளனர். அப்போது, பிரகாஷ் தன் காதலியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரகாஷ், காதலியை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு, கதவை உள்பக்கமாக தாழிட்டுள்ளார்.

சந்தேகமடைந்த அப்பெண், ஜன்னல் வழியாக பார்த்தபோது பிரகாஷ் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதை பார்த்துள்ளார். உடனே, பிரகாஷின் நண்பருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் வந்து கதவை உடைத்து பிரகாஷை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவ பரிசோதனையில், வரும் வழியிலேயே பிரகாஷ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார், பிரகாஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement