முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

விருதுநகர்;விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் வேதியியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. வேதியியல் துறை தலைவர் சாமி வரவேற்றார். கல்லுாரி தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார்.

இதில் உபதலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி, தொழிலதிபர்கள் முத்துமணி, காந்திராஜன், ரத்தினசாமி, சந்திரசேகரன், முன்னாள் மாணவர்கள் சண்முகசுந்தரம், முருகேசன், ராஜசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர். இணை பேராசிரியர் பால்பாண்டியன் நன்றி கூறினார்.

Advertisement