பொதிகை ரயில் முதலாவது பிளாட்பார்மில் நின்று செல்ல சிவகாசி பயணிகள் எதிர்பார்ப்பு
சிவகாசி:செங்கோட்டை சென்னை பொதிகை விரைவு ரயில் சிவகாசி ரயில்வே ஸ்டேஷனில் முதலாவது பிளாட்பார்மில் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசியிலிருந்து சென்னை பொதிகை ரயிலில் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்த சென்னை பொதிகை விரைவு ரயில் சிவகாசி ரயில்வே ஸ்டேஷனில் பல ஆண்டுகளாக முதல் பிளாட்பார்மிற்கு வந்து நின்று சென்றது. இதனால் பயணிகள் எளிதில் ஏறி இறங்கி சென்றனர். ஆனால் ஆனால் தற்போது ஒரு மாதத்திற்கு மேலாக இந்த ரயில் இரண்டாவது பிளாட்பார்மில் வந்து செல்கிறது. இங்கு போதிய மின் விளக்கு வசதி இல்லை. பெட்டி எந்த இடத்தில் நிற்கும் என்ற விவரங்களும் இல்லை. மேலும் கூரை வசதியும் இல்லை. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே வழக்கம்போல முதல் பிளாட்பார்மில் பொதிகை ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
தேர்தல் வழக்கு வாபஸ் விவகாரம் :பன்னீருக்கு ஐகோர்ட் நிபந்தனை
-
தேர்தலின்போது நகைகள் எடுத்து செல்ல விதிகள் வகுக்கக்கோரி வழக்கு
-
மகளுக்கு பாலியல் தொந்தரவு; தந்தைக்கு சாகும் வரை சிறை
-
பட்டாவுக்கு லஞ்சம் வி.ஏ.ஓ.,வுக்கு 'காப்பு'
-
சிறுமிக்கு தொல்லை; 3 பேருக்கு 20 'ஆண்டு'
-
சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை