சிறுமி திருமணம்: வாலிபருக்கு 10 ஆண்டு
திருநெல்வேலி: 15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி 'போக்சோ' நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி அருகே சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த் 25. இவர் 2021ல் 11ம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியை காதலித்தார். அவரை கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்து.
சிறுமிக்கு தாலி கட்டிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஆனந்த் வெளியிட்டார். ஆனந்தின் தந்தை அந்தோணி 65, தாய் மாரியம்மாள் 55, உறவினர் பால்ராஜ் 25, இதற்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. ஆனந்த்க்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.20,000 அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ்குமார், தீர்ப்பளித்தார். அந்தோணி, மாரியம்மாள், பால்ராஜை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மேலும்
-
ஏ.பி.எல்., பயனாளிகளிடம் பி.பி.எல்., அட்டை பறிமுதல் செய்ய அமைச்சர் முனியப்பா உறுதி
-
4 சட்டசபை தொகுதிகளில் களம் காணும் 65 வேட்பாளர்கள் ஆலந்துாரில் 23 பேர் போட்டியிடுவதால் 2 ஓட்டு இயந்திரங்கள்
-
சில வரி செய்திகள்
-
விளையாட்டு தின விழா
-
கர்நாடகாவில் பி.யு., தேர்வில் 86.48 சதவீதம் பேர் தேர்ச்சி வணிக பாடத்தில் 600 க்கு 600 எடுத்து 2 மாணவியர் சாதனை
-
காது கேட்காதவரை கொலை செய்த மாற்றுத்திறனாளிகள் இருவர் கைது