விளையாட்டு தின விழா

கீழம்பி: கீழம்பியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், உடற்கல்வி துறை சார்பில் விளையாட்டு தின விழா நடந்தது.

காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கலையரங்கில் நடந்த ஆண்டு விளையாட்டு தின விழாவிற்கு, கல்லுாரி நிறுவனர் போஸ் தலைமை வகித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சாந்தி விழாவை தொடங்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் துவக்கவுரையாற்றினார். உடற்கல்வி துறை இயக்குநர் மற்றும் தலைவர் விஜய குமார் வரவேற்புரையாற்றினார்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பரிசு, சான்றிதழ் மற்றும் கோப்பைகள், பதக்கம் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெண்கள் பிரிவில் தமிழ்த்துறையும், ஆண்கள் பிரிவில் பி.சி.ஏ., துறையும் பெற்றன. உடற்கல்வி இயக்குநர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

விழாவில், கல்லுாரி துணை முதல்வர் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement