மத்திய அமைச்சர் முருகன் மீதான தேர்தல் வழக்கு ரத்து
சென்னை: நீலகிரி லோக்சபா தொகுதியில், 2024ல் பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிட்டார்.
அப்போது, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கர் கோவிலுக்கு சென்றதாகவும், தாமரை சின்னம் அச்சிட்ட துண்டு அணிந்து, கோவிலுக்குள் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பிரசாரம் செய்ததாகவும், திருப்பூர் மாவட்ட தி.மு.க., வழக்கறிஞர் அணி அமைப்பு செயலர் எம்.பார்த்திபன், அவிநாசி போலீசில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு விசாரணை, அவிநாசி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ''குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை,'' என்று, மத்திய அமைச்சர் முருகன் மீதான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும்
-
மஞ்சளை பாதிக்காத மேற்காசிய போர் கூடுதல் விலையில் தொடர் ஏற்றுமதி
-
எலுமிச்சம் பழம் விலை 'கிடுகிடு' 1 கிலோ 170 ரூபாயாக அதிகரிப்பு
-
விமான நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் ரூ.4,000 கோடியில் உத்தரவாத திட்டம்
-
குறைந்து வரும் வங்கி டிபாசிட் அதிகரிக்க ஆர்.பி.ஐ., ஆலோசனை
-
புதிய அமைதி பேச்சுக்கு அமெரிக்கா நிபந்தனை
-
வர்த்தக ஒப்பந்த பேச்சு நடத்துவதற்கு அமெரிக்கா செல்கிறது இந்திய குழு