மஞ்சளை பாதிக்காத மேற்காசிய போர் கூடுதல் விலையில் தொடர் ஏற்றுமதி
சென்னை : மேற்காசிய போர் பதற்றத்துக்கு மத்தியில் மஞ்சள் விலை உயர்ந்தும், அதன் ஏற்றுமதி நிலையாக இருப்பதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஏற்றுமதியாளர் கே.எஸ்.கமாலுதீன் கூறியதாவது:
தமிழக மஞ்சளுக்கு சர்வதேச சந்தையில் எப்போதும் வரவேற்பு உண்டு. கடந்த 2024-25ம் ஆண்டில் 1,76,000 டன் மஞ்சள் ஏற்றுமதி செய்து 2,800 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. போர் பதற்றத்தால் பல பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மஞ்சள் தொடர்ந்து ஏற்றுமதியாகி கொண்டிருக்கிறது.
உள்ளூர் சந்தையில் 1 கிலோ மஞ்சளை 190 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறோம். மஞ்சள் வரத்தும் போதுமான அளவுக்கு உள்ளது. மஞ்சளுக்கு ஆசிய நாடுகளே பெரிய சந்தைகளாக உள்ளன.
வங்கதேசம், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் சமையலுக்காக அதிகளவில் இறக்குமதி செய்கிறது. மருந்து மற்றும் காஸ்மெட்டிக் தேவைக்காக ஜப்பான், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன. மஞ்சளை பொறுத்தவரை மத்திய கிழக்கு நாடுகளுக்கு 26 சதவீதம்தான் ஏற்றுமதியாகிறது. போரால் மஞ்சள் ஏற்றுமதிக்கு பாதிப்பில்லை.
இவ்வாறு கூறினார்.
மேலும்
-
அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்காக 'செல்பேசி' செயலி: பாலு வாக்குறுதி
-
கோவில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: பக்தர்கள் அவதி
-
வரும் 1ல் 'மெட்ரோ' பயணியர் அட்டை சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றம்
-
வாக்குறுதிகளை தாமதமின்றி நிறைவேற்றுவேன்: ஐ.ஜே.கே.,வேட்பாளர் வெங்கடேசன் உறுதி
-
தொகுதி வளர்ச்சியை பார்த்து மக்கள் என்னை வெற்றி பெற செய்வார்கள்: காங்., வேட்பாளர் ஹசன் மவுலானா பிரசாரம்
-
தொகுதி வளர்ச்சிக்கு மீண்டும் என்னை வெற்றி பெற செய்யுங்கள்: செந்தமிழன்