நாமக்கல் நீதிமன்றங்களில் சமரச மைய வார திருவிழா
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில், சமரச மைய வார திருவிழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்-றது.
தமிழ்நாடு சமரச மைய உத்தரவின்படி, நாமக்கல் மாவட்ட சம-ரச மைய தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதிபதியுமான குரு-மூர்த்தி வழிகாட்டுதலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சம-ரச தீர்வு மையங்களில், சமரச மைய வார திருவிழா நடைபெற்-றது. நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருச்செங்-கோடு, ராசிபுரம் மற்றும் பரமத்தி ஆகிய தாலுகாவில் உள்ள நீதி-மன்றங்களில், நீதிபதிகள் சமரச விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து பொதுமக்களுக்கு விழிப்பு-ணர்வு ஏற்படுத்தினர். நாமக்கல்லில் பொதுமக்கள் கூடும் இடங்களான நீதிமன்ற வளாகம், பஸ் நிறுத்தம் மற்றும் பூங்கா ஆகிய இடங்களிலும் பிர-சுரங்கள் வினியோகிக்கப்பட்டன. கிராமங்களில் நடமாடும் வாகனம் மூலமாக, விழிப்புணர்வு காணொளி காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் சட்டக்கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்-புணர்வு பேரணியும் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட சம-ரச மைய தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குரு-மூர்த்தி நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை, வழக்காடி
கள் சமரச தீர்வு மையம் மூலமாக சமரச முறையில் தீர்வு கண்டு இரு தரப்பிலும் வெற்றி, தோல்வி இல்லாமல் வழக்கை முடித்து பயன்பெற வேண்டும் என்றார். நிகழ்ச்சி
யில் கலெக்டர் துர்காமூர்த்தி, டி.ஆர்.ஓ., சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா