50 ஆண்டுகால விவசாயிகளின் போராட்டம் 800 பேருக்கு பட்டா வழங்கி தி.மு.க., சாதனை
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட நாரைக்கிணறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த, 50 ஆண்டுக-ளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதி-களில் வசிக்கும் மக்கள், தங்கள் நிலத்திற்கு முறையான பட்டா கோரி, 50 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்-தனர். பலமுறை அரசுக்கு மனுக்கள் அளித்தும் கடந்த கால ஆட்சி-களில் எவ்வித தீர்வும் காணப்படாமல் இருந்தது. விவசாயிகள் தங்களது நிலத்திற்கு அங்கீகாரம் இன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இந்நிலையில், ராசிபுரம் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்-பாளர் அமைச்சர் மதிவேந்தன் நேற்று நாரைக்கிணறு பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது: நாரைக்-கிணறு பகுதி விவசாயிகள் பட்டா இன்றி தவிப்பது குறித்து கடந்த, 2021-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது எங்களிடம் கோரிக்கை வைத்தனர். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்-டன. விவசாயிகளின், 50 ஆண்டு கால கனவை நனவாக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் இதற்கான சிறப்பு அரசாணையை வெளியிட்டார். அதன் அடிப்படையில் தற்போது நிலங்கள் வகைப்படுத்தப்பட்டு, 800 விவசாயிகளுக்கு பட்டா வழங்கப்பட்-டுள்ளன. இதன் மூலம் விவசாயிகளின் நீண்ட கால போராட்டத்-திற்கு தி.மு.க., அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.'
இவ்வாறு அவர் பேசினார்.
சட்டசபை தேர்தல் பொறுப்பாளர் பாலசந்தர், ஒன்றிய செய-லாளர் ராமசுவாமி மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர். அமைச்சரின் பேச்சால் உற்சாகமடைந்த விவசாயிகள், அவருக்கு சால்வை அணிவித்து தங்களது நன்றியை தெரிவித்தனர். திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
பொய்யான வாக்குறுதிகள் அளித்து மக்களை ஏமாற்றி வரும் தி.மு.க., ;பிரசாரத்தில் அ.தி.மு.க.,வினர் குற்றச்சாட்டு
-
மகள் மாயம் :தந்தை புகார்
-
அரங்கநாத பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
-
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் சமரச தின விழா கருத்தரங்கம்
-
ரசாயனங்களுக்கு சுங்கவரி விலக்கு: ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு
-
பாலாற்றங்கரையோர கிராமங்களில் கோடையிலும் விவசாய பணி துவக்கம்