பொய்யான வாக்குறுதிகள் அளித்து மக்களை ஏமாற்றி வரும் தி.மு.க.,  ;பிரசாரத்தில் அ.தி.மு.க.,வினர் குற்றச்சாட்டு 

கள்ளக்குறிச்சி: தேர்தலுக்காக பொய்யான வாக்குறுதியை அளித்து, மக்களை ஏமாற்றும் தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட வேண்டும் என அ.தி.மு.க.,வினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராஜிவ்காந்தி, நேற்று கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் ஓட்டு சேகரித்தார்.

அப்போது அ.தி.மு.க., செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு ஆகியோர் ஆதரவு கேட்டு பேசுகையில், 'கடந்த தேர்தலில் நீட் தேர்வு ரத்து போன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி தி.மு.க., ஆட்சியை பிடித்தது. தற்போதும் பொய்யான வாக்குறுதி அளித்து மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று தி.மு.க.,வினர் நினைக்கின்றனர். மக்களை ஏமாற்றும் தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார்.

ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனிவான், பாசறை செயலாளர் வினோத், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் கோமுகிமணியன், பா.ம.க., தமிழரசன், அ.ம.மு.க., மதுசூதனன், பா.ஜ., ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement