ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் சமரச தின விழா கருத்தரங்கம்
கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சமரச தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கிற்கு கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். டீன் அசோக் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் அனந்தராமன் வாழ்த்திப் பேசினார். சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர்கள் செந்தில்குமார், சங்கர் சிறப்புரையாற்றினர்.
நீதிமன்றங்களில் வழக்குப ்பதிவு செய்த பிறகு வழக்கு சமரச மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும். புகார் கொடுத்தவர்கள் தங்களது வழக்கறிஞர் மூலமாக பிரதிவாதியின் வழக்கறிஞர்களை கொண்டு பேசி பிரச்னைக்கு சுமூக தீர்வு காணலாம்.
இதனால் வழக்கு நிலுவையில் இல்லாமல், 60 நாட்களில் முடித்து வைக்கப்படும். மாணவர்கள் இதை புரிந்து கொண்டு பொதுமக்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கவேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது. கருத்தரங்கில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.
மேலும்
-
திமுக 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
இலவச வாக்குறுதிகள் தரும் கட்சிகள் மீது வெறுப்பு; தேர்தல் களம் இறங்கிய தாய், மகள்
-
மகள் மேட்டூரில்; மனைவி கிருஷ்ணகிரியில்: தேர்தல் களத்தில் சந்தனக்கடத்தல் வீரப்பன் வாரிசுகள்
-
நிலவை நோக்கிய ஆர்டெமிஸ் 2 திட்டப்பயணம் நிறைவு; பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்
-
நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்; இன்று புதுக்கோட்டையில் பிரசாரம்
-
கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர்