11 வயது சிறுமி பலாத்காரம் பீஹார் வாலிபர் கைது 

ஞானபாரதி: கலபுரகியை சேர்ந்த த ம்பதி பெங்களூரு ஞானபாரதியில் வசிக்கின்றனர். இவர்களுக்கு, 11 வயதில் மகள் உள்ளார். ஐந்தாம் வகுப்பு முடித்து உள்ள அவர், விடுமுறையால் வீட்டில் இருக்கிறார்.

நேற்று முன்தினம் காலை சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றனர். வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தார்.

சிறுமி வசிக்கும் வீட்டின் அருகில் புதிதாக கட்டடம் கட்டப்படுகிறது.

இங்கு கட்டட தொழிலாளியாக வேலை செய்யும் பீஹார் மாநிலத்தின் முகமது முன்னா, 25, சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். பெற்றோர் இல்லாதது தெரிந்ததும், வீட்டிற்கு வந்து சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்தார்.

இதுபற்றி பெற்றோரிடம் சொல்லக்கூடாது என்று கூறி, தன்னிடம் இருந்த, 150 ரூபாயை சிறுமியிடம் கொடுத்து விட்டுச் சென்றார்.

மாலை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய தம்பதி, மகள் கையில் பணம் இருப்பதை பார்த்து யார் கொடுத்தது என்று கேட்டனர்.

அப்போது சிறுமி நடந்த சம்பவத்தை கூறினார். அதிர்ச்சி அடைந்தவர்கள் முகமது முன்னா மீது ஞான பாரதி போலீசில் புகார் செய்தனர். போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார் முகமது முன்னாவை கைது செய்தனர்.

Advertisement