நேற்று உயர்வு; இன்று சற்று சரிவு; தங்கம் விலை சவரனுக்கு 200 குறைவு
சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 14,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், (ஏப்ரல் 09) ஆபரண தங்கம் கிராம், 14,000 ரூபாய்க்கும், சவரன், 1,12,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (ஏப்ரல் 10), தங்கம் விலை கிராமுக்கு, 125 ரூபாய் உயர்ந்து, 14,125 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு, 1,000 ரூபாய் அதிகரித்து, 1,13,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 265 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.65 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 14,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
மேலும்
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் துவங்கியது; மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்
-
சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்; பறக்கும் படை நடவடிக்கை
-
ஆந்திராவில் வேன் மீது டேங்கர் லாரி மோதி விபத்து; கர்நாடகா பக்தர்கள் 8 பேர் பலி
-
உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரிப்பு
-
உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்: டைம் இதழ் பட்டியலில் இந்தியர்கள் யார் யார்?