வேதகிரீஸ்வரர் உண்டியலில் ரூ.10.92 லட்சம் வசூல்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் உண்டியல்களில், 10.92 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.

இக்கோவிலில் உள்ள உண்டியல்கள், உதவி ஆணையர் ராஜலட்சுமி, ஆய்வாளர் பாஸ்கரன், செயல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் மேற்பார்வையில், நேற்று திறக்கப்பட்டன.

அவற்றில், பக்தர்கள் செலுத்தியுள்ள காணிக்கைகள் குறித்து, நிர்வாகத்தினர் தெரிவித்ததாவது:

பொது உண்டியலில், 9 லட்சத்து 36,895 ரூபாய் மற்றும் 34 கிராம் தங்கம், 138 கிராம் வெள்ளி செலுத்தப்பட்டு உள்ளது.

திருப்பணி உண்டியலில், ஒரு லட்சத்து 55,709 ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது.

Advertisement