உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளர் வீதி வீதியாக ஓட்டு சேகரிப்பு

உத்திரமேரூர்: காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய தி.மு.க., வேட்பாளர் சுந்தர் கோலிவாக்கம், புஞ்சை, வளத்தோட்டம், குருவிமலை, காலுார், வேடல், மேல்பேரமநல்லுார், ஆர்ப்பாக்கம், மாகறல், வயலுார் உள்ளிட்ட பகுதிகளில் வேன் பிரசாரம் செய்தார்.

அதை தொடர்ந்து, இளையனார்வேலுார் கிராமத்தில் பிரசாரம் செய்த அவருக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அங்கு பேசிய வேட் பாளர் சுந்தர், இளையனார்வேலுார் - நெய்யாடுவாக்கம் செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணி தி.மு.க., ஆட்சியின் முயற்சியால் தற்போது நடைபெற்று வருவதாக கூறினார்.

மேலும், இளையனார்வேலுார் ஊராட்சியில் 85 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா சமீபத்தில் அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளதாகவும், அந்த பயனாளிகளுக்கு இத்தேர்தலில் வெற்றி பெற்றதும் இலவச வீடு கட்டித்தரப்படும் என கூறினார்.

அடுத்து தம்மனுார் பிரசாரத்தின் போது, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் முறையாக வேலை வழங்கப்படும் என வும், அடுத்த தி.மு.க., ஆட்சி அமைந்ததும் அத்திட்டத்தில் நாளொன்றுக்கு 350 ரூபாய் கூலியாக உயர்த்தி வழங்கப்பட உள்ளதாக பேசினார்.

கொள்முதல் நிலையங்களில் நெல்லுக்கான விலை உயர்த்தி வழங்கப்படும் எனவும் கூறினார்.

தொடர்ந்து, கம்பராஜ புரம் , காவாந்தண்டலம், அங்கம்பாக்கம், அவளூர் உள்ளிட்ட பகுதிகளில் பிர சாரம் மேற்கொள்ளப்பட்டு ஆசூரில் நிறைவு செய்தார்.

Advertisement