அனைத்து கட்சி ஆலோசனை
முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் கூட்டம் நடந்தது. பொது பார்வையாளர் உலகநாதன் தலைமை வகித்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் கங்காதேவி முன்னிலை வகித்தார். முதுகுளத்துார் தொகுதியில் 35 பேர் வேட்பு மனுதாக்கல் செய்த நிலையில் பரிசீலனை, வாபஸ் செய்யப்பட்டு 15 மனுக்கள் திரும்ப பெறப்பட்டு முடிவில் 20 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
அப்போது முதுகுளத்துார் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்றியும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஏதேனும் புகார்கள் இருந்தால் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தொடர்பு கொள்ளலாம் என்றனர். உடன் தாசில்தார் கோகுல்நாத், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் வேங்கட கிருஷ்ணன், ஆர்.ஐ.,தினேஷ்பிரபு உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மூலிகைகளை பாதுகாப்பது அவசியம்: பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் அறிவுரை
-
சில்வர் ஓக் மரங்கள் வெட்டி கடத்தல்: கண்டு கொள்ளாத அதிகாரிகளால் அதிருப்தி
-
பீட்ரூட் தோட்டத்தில் களை எடுக்கும் பணி :விவசாயிகள் ஈடுபாடு
-
கர்நாடகா வனத்தில் மாயமான சிறுமி: இரு நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு
-
ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட பணம் பறிமுதல்
-
கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை: மலை காய்கறி தோட்டம் சேதம்
Advertisement
Advertisement