இளம் பெண்ணை ஏமாற்றிய வழக்கறிஞருக்கு 10 ஆண்டு சிறை

விழுப்புரம்: இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழகி ஏமாற்றிய வழக்கறிஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகிளா கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலையைச் சேர்ந்தவர் சிவராஜ், 33; வழக்கறிஞர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கிப் பழகினார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண் கேட்டபோது, திருமணத்திற்கு மறுத்து ஏமாற்றியுள்ளார்.

இது குறித்த புகாரின்பேரில், உளுந்துார்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து சிவராஜை கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம் சாட்டப்பட்ட சிவராஜிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் ரூபாய் அரசு நிவாரண தொகையாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement