வாக்காளர்களுக்கு ஏப்., 12 முதல் பூத் சிலிப்    

சிவகங்கை:சிவகங்கை வாக்காளர்களுக்கு பூத் சிலிப் ஏப்., 12 முதல் 18 வரை வழங்கப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 5,48,106 ஆண், 5,71,186 பெண், 43 மூன்றாம் பாலின வாக்காளர் என 11,19,335 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது ஓட்டுச்சாவடிகளை எளிதாக கண்டறியவும், பாகம் மற்றும் வரிசை எண்ணை எளிதில் அறியும் விதமாக ஏப்., 12 முதல் 18 வரை அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் அலுவலர்கள் மூலம் வாக்காளர் பூத் சிலிப் வழங்கப்பட உள்ளது. வாக்காளர்கள் தங்களது பூத் சிலிப்பை பெற்று 100 சதவீதம் ஓட்டினை பதிவு செய்ய வேண்டும் என்றார். ///

Advertisement