முதுகுளத்துார் தொகுதியில் பரவும் பணம் கொடுக்கும் வீடியோக்கள்: பறக்கும் படை நடவடிக்கை எடுப்பார்களா

முதுகுளத்துார்: முதுகுளத்துார் தொகுதியில் ஓட்டு கேட்டு செல்லும் தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் ராஜகண்ணப்பன் சென்ற பிறகு ஆரத்தி மற்றும் வரவேற்பு அளித்த பெண்களுக்கு தி.மு.க., நிர்வாகி பணம் கொடுக்கும் வீடியோ பரவும் நிலை தொடர்கிறது.

முதுகுளத்துார் தொகுதியில் செல்லும் கிராமங்களில் எல்லாம் பெண்கள் தி.மு.க., வேட்பாளர் ராஜகண்ணப்பனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஐந்தாண்டுகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றினீர்களா என்று கேள்வி எழுப்புகின்றனர். இதனால் அங்கிருந்து சமாளித்து செல்கிறார்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் குடிநீருக்காக காத்திருந்து நிலையில் தற்போது இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க மாட்டீர்களா என்றும் மேலும் இன்னும் சில நாட்களில் அனைத்து கிராமத்திற்கும் குடிநீர் வழங்கப்படும் பல கிராமங்களில் பேசிவிட்டு சாமர்த்தியமாக செல்கிறார் என்று கூட்டத்தில் இருக்கும் பெண்கள் பேசுகின்றனர்.

இந்நிலையில் இதை சமாளிக்க பெண்களுக்கு பல்வேறு கிராமங்களில் தி.மு.க., நிர்வாகிகள் பணம் கொடுக்கும் வீடியோ பரவி வருகிறது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணம் கொடுப்பதை தடுப்பார்களா, தேர்தலில் பணம் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

---

Advertisement