வேட்பாளர் எண்ணிக்கையில் திருவாடானை முதலிடம்
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டத்தில் மற்ற தொகுதிகளை பின்னுக்கு தள்ளி வேட்பாளர்கள் எண்ணிக்கையில் திருவாடானை முதலிடத்தை பிடித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் வேட்பு மனுக்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு களத்தில் உள்ளவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. இதில் திருவாடானையில் 21 பேர் போட்டியிடுவதால் முதலிடத்தில் உள்ளது. அ.தி.மு.க., காங்., த.வெ.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் மனுக்கள் தாக்கல் செய்ததே இதற்கு காரணம்.
இத்தொகுதியில் 21 பேர் களத்தில் இருப்பதால் 2 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி என்ற பெருமையை பெற்றுள்ள திருவாடானையில் வெற்றி மகுடம் சூடப் போவது யார் என்று வாக்காளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஒரு தொகுதியில் வேட்பாளர்கள் அதிகரிப்பது என்பது அந்த தொகுதியின் அரசியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர போராட்டத்தில் இருந்தே இப்பகுதி அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றனர்.
--
மேலும்
-
தேர்தலுக்கு 8 நாட்கள் தான்; அரசியல் கள பரபரப்பு செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
தபால் ஓட்டை பிரித்து பார்த்து தி.மு.க.,வினரிடம் கூறிய அலுவலர்
-
கோவை வந்த சிதம்பரத்தை சந்திக்காமல் வேட்பாளர்கள் புறக்கணித்ததால் பரபரப்பு
-
நிர்வாகிகள் அவிநாசி தொகுதியில் பிரசாரம் ஆதரவின்றி தவிக்கும் ராசிபுரம் த.வெ.க., வேட்பாளர்
-
கொடுமுடியில் பிளம்பர் கொலை போலீசார் விசாரணை துவக்கம்
-
சட்டக்கல்வி; எட்டாத வாக்குறுதிகள்