வாக்காளர் விழிப்புணர்வு

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் ராஜபாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட புத்துார் ஊராட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. 100 சதவீதம் முழுமையாக ஓட்டளிக்க வேண்டும் என்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோலம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முத்துலட்சுமி, உதவி இயக்குனர் (நடவு பொருள்) நசீமா, உதவி அலுவலர்கள் மகளிர் குழுக்கள், ஊராட்சி மன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement