100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு பேரணி
சூலூர்: வரும் தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி, சூலூரில் மாற்றுத்திறனாளிகள் இரு சக்கர வாகன பேரணி நடத்தினர்.
தமிழகத்தில், ஏப்., 23 ம்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும், என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. அதற்காக, பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சூலூர் தொகுதியில் உள்ள மாற்று திறனாளிகள், டிஎன் ரைட்ஸ் பணியாளர்கள், மாற்றுதிறனாளிகள் துறை ஊழியர்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன பேரணி சூலூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து துவங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். முன்னதாக, 100 சதவீதம் ஓட்டளிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
என் ஓட்டு என் உரிமை, விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுதுவோம். விடுமுறை தினம் என கருதாதே, விதியை மாற்றும் தினமாகும், விரல் நுனியில் வைப்பாங்க மை; காசு வாங்காது எங்க கை, ஓட்டளிப்பது ஒவ்வொருவரின் கடமை என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதகைகளை ஏந்திய படி பேரணி நடந்தது. சூலூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில், 100 சதவீத ஓட்டுப்பதிவே நமது இலக்கு என வலியுறுத்தப்பட்டது.
மேலும்
-
சதமடிக்கும் வெயில் மக்கள் பாதிப்பு
-
அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்
-
தி.மு.க.,வுக்கு பெண்கள் அமோக ஆதரவு: வால்பாறை தி.மு.க., வேட்பாளர் பெருமிதம்
-
பொரியல் தட்டை விலை உயர்வு
-
பைக்கில் சென்ற பெண்ணிடம் ஒரு சவரன் தங்க சங்கிலி பறிப்பு
-
மீண்டும் பஸ்கள் இயக்கக் கோரி துடியலுார் ஆர்.டி.ஓ., முற்றுகை