ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டு பதிவு இயந்திரங்கள் ஐந்து மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இம்மாவட்டத்தில் உள்ள தேவிகுளம், உடும்பன்சோலை, பீர்மேடு, இடுக்கி, தொடுபுழா ஆகிய தொகுதிகளில் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்டத்தில் 77.15 சதவீதம் ஓட்டுகள் பதிவான நிலையில், அதிகபட்சமாக உடும்பன்சோலை தொகுதியில் 79.51 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. மாவட்டத்தில் பதிவான ஓட்டுகள் விபரம்:
ஆண்கள் - 3,97, 586. பெண்கள்- 4,07, 833. இதரர்- 8, மொத்தம்- 8,05,427. பதிவான ஓட்டுகள் - 6,21,373. ஆண்கள்- 3,12,207. பெண்கள்- 3,09,160. இதரர்- 6
தொகுதி வாரியாக பதிவான ஓட்டுகள்:
தேவிகுளம்:
மொத்த ஓட்டு:- 1,42,265. ஆண்கள்- 70,071.பெண்கள்- 72,193, இதரர் 1. பதிவான ஓட்டு: - 1,10,780.
ஆண்கள்- 55,855,பெண்கள்- 54,924, இதரர் 1. சதவீதம்- 77.87
உடும்பன்சோலை:
மொத்த ஓட்டுகள்:- 1,50,303. ஆண்கள்- 74,219,பெண்கள்- 76,081 இதரர் 3. பதிவான ஓட்டுகள் - 1,19,510. ஆண்கள்- 59,784, பெண்கள்- 59,724,இதரர் - 2.சதவீதம்- 79.51
பீர்மேடு: மொத்த ஓட்டுகள்: - 1,56,542. ஆண்கள்- 77,210, பெண்கள்- 79,331, இதரர்1.
பதிவான ஓட்டுகள் :- 1,21,347. ஆண்கள்- 61,131, பெண்கள்- 60,215, இதரர் 1. சதவீதம்- 77.52
இடுக்கி:
மொத்த ஓட்டுகள்: - 1,67,822.ஆண்கள்- 83,076,பெண்கள்- 84,746, இதரர்- 0
பதிவான ஓட்டுகள்: - 1,26,541.ஆண்கள்- 64,039, பெண்கள்- 62,502 இதரர் - 0. சதவீதம்- 75.4
தொடுபுழா: மொத்த ஓட்டுகள்: - 1,88,495.ஆண்கள்- 93,010,பெண்கள்- 95,482,இதரர்- 3
பதிவான ஓட்டுகள்:- 1,43,195. ஆண்கள்- 71,398, பெண்கள்- 71,795,சதவீதம்- 75.97
பாதுகாப்பு:தேவிகுளம் தொகுதி - மூணாறு அரசு தொழில் பயிற்சி மேல்நிலை பள்ளி, உடும்பன்சோலை தொகுதி - நெடுங்கண்டம் புனித செபாஸ்டியன் மேல்நிலை பள்ளி, தொடுபுழா தொகுதி - தொடுபுழா நியூமன் கல்லூரி, இடுக்கி தொகுதி - பைனாவ் உண்டு, உறைவிட பள்ளி, பீர்மேடு தொகுதி - குட்டிகானம் மரியகிரி ஆங்கிலம் மீடியம் பள்ளி ஆகிய மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மே 4ல் நடப்பதால், மையங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்
-
வலிப்பால் குழந்தை பலி
-
வறட்சியால் காயும் பயிர் விவசாயிகள் வேதனை
-
116 வேட்பாளர்களில் 21 பெண்கள் மட்டுமே! மேடை முழக்கம் வெறும் கோஷம் ------------------------------ அம்பலமான கட்சிகள் 'வேஷம்'
-
கழிவுநீர் கால்வாய் தரைப்பாலம் சேதம்
-
ஆட்டு வியாபாரியிடம் ரூ. 69,400 பறிமுதல்
-
அரசு திட்டங்கள் தொடர தி.மு.க.,வை ஆதரிக்க வேப்பனஹள்ளி தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்