சட்டசபை தொகுதி வாரியாக அலுவலர்கள் பணி ஒதுக்கீடு
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட 7 தொகுதிகளின் வாரியாக அலுவலர்களை நியமிக்கும் 2ம் கட்ட ஒதுக்கீடு பணி நேற்று நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு கணினி அறையில் மாவட்ட தேர்தல் அலுவலரான சுகபுத்ரா தலைமையில் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் உதயன் மிஷ்ரா(ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார்), அரவிந்த் மீனா(சாத்துார், சிவகாசி), ரஞ்சித் குமார் லால்(விருதுநகர், அருப்புக்கோட்டை), சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா(திருச்சுழி) ஆகியோர் முன்னிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி நிலைய தலைமை அலுவலர்கள், ஓட்டுச்சாவடி நிலை - 1, நிலை - 2, நிலை - 3 அலுவலர்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் சட்டசபை தொகுதி வாரியாக 2ம் கட்டமாக தேர்வு செய்யப்பட்டு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ராஜபாளையம் தொகுதியில் 269 ஓட்டுச்சாவடி மையங்களில் 1292 அலுவலர்களும், ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதி 308 ஓட்டுச்சாவடி மையங்களில் 1480 அலுவலர்களும், சாத்துார் சட்டசபை தொகுதியில் 291 ஓட்டுச்சாவடி மையங்களில் 1396 அலுவலர்களும், சிவகாசியில் 290 மையங்களில் 1392 அலுவலர்களும், விருதுநகரில் 281 மையங்களில் 1348 அலுவலர்களும், அருப்புக்கோட்டையில் 270 மையங்களில் 1296 அலுவலர்களும், திருச்சுழியில் 292 மையங்களில் 1400 அலுவலர்களும் என 7 தொகுதிளில் 2001 ஓட்டுச்சாவடி மையங்களில் 9604 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
நேர்முக உதவியாளர் சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தாசில்தார் சீனிவாசன், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்
-
தி.மு.க.,வுக்கு பெண்கள் அமோக ஆதரவு: வால்பாறை தி.மு.க., வேட்பாளர் பெருமிதம்
-
பொரியல் தட்டை விலை உயர்வு
-
பைக்கில் சென்ற பெண்ணிடம் ஒரு சவரன் தங்க சங்கிலி பறிப்பு
-
மீண்டும் பஸ்கள் இயக்கக் கோரி துடியலுார் ஆர்.டி.ஓ., முற்றுகை
-
துணை ராணுவ படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு