நலம் மருத்துவமனையில் கேன்சர் சிகிச்சை மையம் திறப்பு விழா
தேனி:தேனி நலம் மருத்துவமனையில் நலம் கேன்சர் சிகிச்சை மையம் திறப்பு விழா நடந்தது. மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜ்குமார் தலைமை வகித்தார். சிகிச்சை மையத்தை ஈரோடு கேன்சர் சென்டர் நிர்வாக இயக்குநர் டாக்டர் வேலவன் திறந்து வைத்தார்.
அவர் பேசுகையில், 'உலகில் 2வது பெரிய ஆட்கொல்லி நோயாக கேன்சர் உள்ளது. மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால் நோய் முற்றிய நிலையில் மருத்துவரை அணுகுகின்றனர். இந்த சிகிச்சை மையம் மூலம் கேன்சர் தடுப்பு வழிமுறைகள் செய்ய உள்ளோம். இந்த மையத்தில் சர்ஜிக்கல் ஆன்காலஜி, மெடிக்கல் ஆன்காலஜி, ரேடியேஷன் ஆன்காலஜி, கீமோதெரபி, ஸ்கிரினிங், சர்ஜரி உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ள உள்ளோம். இதனால் கேன்சர் சிகிச்சைக்காக மற்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது,' என்றார். விழாவில் டாக்டர்கள் ஜெயப்பிரகாஷ், உடையப்பன், ராமசாமி, அழகர்சாமி, தத்தா, தியாகராஜன், பாலசங்கா குழும நிர்வாக தலைவர் கதிரேசன், வர்த்தக பிரமுகர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
ஓட்டு கட்டட பள்ளிகள் சீரமைக்கப்பட வேண்டும்
-
வரத்து கால்வாயில் கழிவுநீர் தேங்கி புதர்மண்டியுள்ளது
-
தேர்தல் முடிந்ததும் தேக்கடியில் குவியும் சுற்றுலா பயணிகள்
-
திருச்சூருக்கு நேரடி பஸ் இயக்க இருமாநில மக்கள் கோரிக்கை
-
தரைமட்ட பாலத்தை உயர்த்த வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை
-
புதர் சூழ்ந்து வீணாகும் பொது கழிப்பிடம்