எம்.கே.பி., நகர் வடக்கு நிழற்சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களுக்கு 'நோட்டீஸ்'
எம்.கே.பி.நகர்: எம்.கே.பி., நகரில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட வாகனங்களை, உடனடியாக அகற்றுமாறு, மாநகராட்சி சார்பில் 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டுள்ளது.
எம்.கே.பி., நகர் மேம்பாலம் அருகே உள்ள வடக்கு நிழற்சாலை, கிருஷ்ணமூர்த்தி நகர், டி.வி.கே., இணைப்பு சாலைகளின் இருபுறமும், தனியார் நிறுவன பேருந்துகள், ஆட்டோக்கள், வேன்கள் என, தினமும் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இதனால், 80 அடி சாலை 40 அடியாக சுருங்கியது. அதுமட்டுமல்லாமல், வாகனங்களின் மறைவை பயன்படுத்தி, வாலிபர்கள் இரவு வேளைகளில் கஞ்சா புகைப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால், அப்பகுதியில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்தன. இது குறித்து பகுதிமக்கள் புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இது குறித்து நம் நாளிதழிலும் செய்தி வெளியானது. இதையடுத்து, சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த தனியார் நிறுவன பேருந்துகள், ஆட்டோக்கள், வேன்கள் என, 50க்கும் மேற்பட்ட வாகனங்களில், தண்டையார்பேட்டை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று எச்சரிக்கை 'நோட்டீஸ்' ஒட்டினர். 'ஒருவாரத்திற்குள் வாகனங்களை அகற்றவில்லையெனில், மாநகராட்சி மூலம் ஆக்கிரமிப்பு வாகனங்கள் அகற்றப்படும்' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
களிமண்குண்டில் காட்சி பொருளான ஆர்.ஓ., பிளான்ட் அரசு நிதி வீணடிப்பு
-
மக்களின் பிரச்னையை தீர்க்க வருவதே அ.தி.மு.க., வேட்பாளர் கந்தன் பெருமிதம்
-
ஹாக்கி வீரர்களின் தேர்தல் விழிப்புணர்வு
-
நாளுக்கு நாள் தொல்லை தாங்கல! விரட்டும் போது கடிக்க வருது
-
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கன்டோன்மென்ட் பகுதிகள் வரும் அமைச்சர் அன்பரசன் உறுதி
-
முளைப்பாரி ஊர்வலம்