அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம் தேதி மாற்றம்

சென்னை:தமிழக அஞ்சல் வட்டம் சார்பில், வட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறை தீர்ப்பு முகாம் சென்னையில் வரும், 15ம் தேதி நடத்தப்படுகிறது.

அஞ்சல்துறை வட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறை தீர்ப்பு முகாம், அவ்வப்போது நடத்தப்பட்டு, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட குறைகள் களையப்பட்டு, தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழக அஞ்சலல் வட்டம் சார்பில், சென்னையில் உள்ள தமிழக வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் வரும், 16ம் தேதி நடத்தப்பதாக இருந்தது. நிர்வாக காரணங்களுக்காக வரும், 15ம் தேதி மதியம், 2:00 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

***

Advertisement