கருவறை முதல் கல்லறை வரை எனக்கு அ.தி.மு.க.,தான்: திருமங்கலம் தொகுதியில் உதயகுமார் உருக்கம்
மதுரை: திருமங்கலம் அ.தி.மு.க., வேட்பாளர் ஆர்.பி .உதயகுமார் கள்ளிக்குடி ஒன்றியம் தென்னமநல்லுார், காசிபுரம், முனியாண்டிபுரம், அகதாபட்டி, கள்ளிக்குடி பகுதிகளில் பிரசாரம் செய்தார். அவருடன் அம்மா சேரிடபிள் டிரஸ்ட் செயலாளர் யு. பிரியதர்ஷினி முரளி, ஒன்றிய செயலாளர்கள் பிரபுசங்கர், அன்னமுத்து, கண்ணன், வக்கீல் விஜயலட்சுமி நாச்சியார், சேதுபதி ஆதிராஜா, காசிமாயன், சரவண பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்
ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது: அடுத்த புத்தாண்டில் முதல்வர் பழனிசாமி இருப்பார். நிச்சயம் உங்கள் ஆசியுடன் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். இன்றைக்கு சுவற்றில் வரையப்பட்ட இரட்டை இலை சின்னத்தை அனைத்தையும் அழித்து வருகிறார்கள். நீங்கள் சுவற்றில் உள்ள சின்னத்தை தான் உங்களால் அழிக்க முடியும். மக்கள் மனதில் உள்ள இரட்டை இலை சின்னத்தை ஒருபோதும் அழிக்க முடியாது.
நான் தாயின் கருவறையில் இருக்கும்போதே எம்.ஜி.ஆர்., இயக்கத்தில் இணைத்துக் கொண்டேன். மாநில ஜெ., பேரவைச் செயலாளர், அமைச்சர், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று மக்களுக்கு சேவையாற்றி வந்தேன். என் உயிர் கல்லறைக்கு போனாலும் என் நெஞ்சில் இரட்டை இலை கொடி தான் படர்ந்து இருக்கும். தாயின் கருவறை முதல் கல்லறை வரை எனக்கு அ.தி.மு.க.,தான். நான் அமைச்சராக இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றுக் கொடுத்தேன். தற்போது திருமங்கலம் - ஒத்தக்கடை வரை மெட்ரோ ரயில் திட்டத்தை தி.மு.க., அரசு காலதாமதம் செய்தது வரைபடத்தில் கூட முறையாக சேர்க்கவில்லை. நிச்சயம் பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வருவார். அப்போது மெட்ரோ ரயில் திட்டம் நிச்சயமாக தொடங்கப்படும் என்றார்.
மேலும்
-
முதல் ஓட்டு; முதல் பெருமை: மதுரை இளம் வாக்காளர்கள் பரவசம்
-
தாழ்வான மின்சார கம்பிகளால் அபாயம்
-
ஓட்டுப்பதிவின்போது ஆங்காங்கே தாமதம்; வாக்காளர்கள் வாக்குவாதம் * ஓட்டளித்த மூதாட்டி மீது கத்திவீச்சு
-
இந்த தேர்தலிலும் என் ஓட்டு 'கள்ள ஓட்டு' :பெங்களூருவில் இருந்து மதுரை வந்தவர் புலம்பல்
-
தினமலர் செய்தி சீரானது ரோடு
-
ஓட்டுப்பதிவு நாள் விடுமுறையால்அடைப்பு: வெளியூர் மக்கள் சிரமம்