மக்களுக்காக சிந்திக்கும் முதல்வரை தேர்வு செய்யுங்கள்:  மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் பாலாஜி பிரசாரம்

மதுரை: 'அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்கள் தடையின்றி கிடைக்க, மக்களுக்காக 24 மணிநேரமும் சிந்திக்கும் முதல்வர் ஸ்டாலினை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும்' என மதுரை மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் பாலாஜி பிரசாரம் செய்தார்.

இத்தொகுதியில் 68வது வார்டுக்கு உட்பட்ட துரைச்சாமிநகர், ஸ்ரீராம்நகர், அங்காள ஈஸ்வரி தெரு, பகத்சிங் தெரு, பொன்மேனி உள்ளிட்ட பகுதியில் பாலாஜி பிரசாரம் செய்து பேசியதாவது:

இந்த வார்டில் வானமாமலை நகர் பம்பிங் ஸ்டேஷன் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்டு பாதாளச் சாக்கடை கழிவு நீர் பிரச்னை சரிசெய்யப்பட்டது. பைபாஸ் ரோடு பி.ஆர்.சி., அலுவலகம் அருகே ரூ.5 லட்சத்தில் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டது. நேருநகர் பைபாஸ் ரோடு அருகில் ரூ.14.30 லட்சத்தில் கழிவுநீர் கிணறு அமைக்கப்பட்டு சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில்பாதாளச் சாக்கடை பிரச்னை சரிசெய்யப்பட்டது.

துரைச்சாமி நகர் ஜவஹர் தெருவில் ரூ.30 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், வேல்முருகன் நகரில் ரூ.23 லட்சத்தில் பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களுக்காக 24 மணிநேரமும் சிந்திக்கும் முதல்வர் ஸ்டாலின் என்றார். மாலையில் பாலாஜியை ஆதரித்து மேற்கு தொகுதியில் ஜெய்ஹிந்த்புரம், சோலையழகுபுரம் பகுதிகளில் அமைச்சர் மூர்த்தி பிரசாரம் செய்தார்.

Advertisement