பஞ்சாங்க படண பூஜை
மதுரை: மதுரையில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் ஜெய்ஹிந்த்புரம் கிளை சா்ரபில் பராபவ வருட பஞ்சாங்க படணபூஜை கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது.
தென்மண்டல தலைவர் அமுதன் முன்னிலை வகித்தார். பராபவ வருடத்தில் அனைவரும் சுபிட்சமாக வாழவும், நீண்டநாள் ஆரோக்கியம், நோய் நொடியின்றி வாழவும் பிரார்த்தனை செய்தனர். காரையூர் வெங்கட்ராமன் பூஜைகள் நடத்தி பஞ்சாங்க பலனை வாசித்தார்.
பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், இளைஞரணி செயலாளர் மீனாட்சி சுந்தரம், மகளிர் அணி செயலாளர் ராஜம்மீனாட்சி, இணைச் செயலாளர்கள் உமா, சித்ரா, ஆலோசகர் கல்யாணி, செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் பங்கேற்றனர். துணைத் தலைவர் ஜெகநாதன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement