இடைக்காட்டூர் சர்ச்சில் பாஸ்கு திருவிழா
மானாமதுரை:இடைக்காட்டூர் சர்ச்சில் நடைபெற்ற பாஸ்கு திருவிழாவில் டிஜிட்டல் திரைகளில் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை கலைஞர்கள் நடித்துக் காட்டினர்.
இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் சர்ச்சில் இந்த வருடத்திற்கான விழா ஏப்ரல் 10 ஆம் தேதி காலை 7:00 மணிக்கு திருப்பலியுடன் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு சர்ச் வளாகத்தில் மறை மாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற பின்னர் இரவு 10:00 மணிக்கு சர்ச்சுக்கு எதிரே உள்ள அரங்கில் 147ம் ஆண்டு பாஸ்கு விழாவை முன்னிட்டு டிஜிட்டல் திரை மற்றும் லேசர் விளக்குகள் மூலமாக இவ்விழாவிற்காக விரதம் இருந்து வந்த கலைஞர்கள் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்து காட்டினர்.
மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம்,விருதுநகர்,திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஜான் வசந்தகுமார் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
மேலும்
-
தேர்தல் ஊழியர்கள் பணி நியமனம் குளறுபடி அதிகம் என குற்றச்சாட்டு
-
துவங்கியாச்சு ஓட்டுப்பதிவு!
-
சாத்தான்குளம் வழக்கு தண்டனை; போலீசாருக்கு கடும் எச்சரிக்கை
-
2011ல் கொடுத்த வாக்குறுதிகளை 2016க்குள் செய்து கொடுத்துள்ளேன் அ.தி.மு.க., வேட்பாளர் அசோக் பெருமை
-
பறக்கும் படை சோதனை ரூ.10.50 லட்சம் பறிமுதல்
-
தேர்தல் விழிப்புணர்வு வாக்காளர்கள் உறுதிமொழி