பா.ம.க., வேட்பாளர் செழியனை ஆதரித்து பகண்டை கூட்ரோட்டில் அன்புமணி பிரசாரம்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செழியனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி மணலுார்பேட்டை மற்றும் பகண்டைகூட்ரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, செழியன் வெற்றி பெற்றால் தொகுதிக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் கொண்டு வரப்படும். தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் தி.மு.க., ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என அன்புமணி பேசினார்.

கூட்டத்தில், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கதிர் தண்டபாணி, அருணகிரி, துரைராஜ், பழனி, சேகர், சந்தோஷ், அரசு இளந்தேவன், நகர செயலாளர் ரமேஷ், பா.ம.க., முன்னாள் எம்.பி., தன்ராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் வடிவேல், மாநில துணைத்தலைவர் மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், நகர செயலாளர் சீத்தாராமன், ஒன்றிய செயலாளர் சுரேஷ், அய்யனார், ராஜேஷ், மணி, கணேஷ், பாலு, சக்திவேல், குரு, முருகன், பிரபு, பா.ஜ., மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், முன்னாள் பொது செயலாளர் ஜெயதுரை, ஒன்றிய தலைவர்கள் வெள்ளைக்காரன், சின்னதுரை, மதியழகன், பார்த்திபன், மணிகண்டன், முருகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் திரளாக பங்கேற்றனர்.

Advertisement