நுாரோலை டாஸ்மாக் கடை அகற்றப்படும் :பா.ம.க., வேட்பாளர் செழியன் வாக்குறுதி

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பா.ம.க., வேட்பாளர் செழியன் சாத்தப்புத்துார், பாவந்துார், கீழ்ப்பாடி உட்பட பல்வேறு கிராமங்களில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது செழியன் பேசியதாவது; இத்தொகுதியில் பயிர்களை பாதுகாக்கும் வகையில் தானியக்கிடங்கு, சாத்தப்புத்துாரில் பஸ் நிழற்குடை கட்டி தருவேன். பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நுாரோலை கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவேன். கீழ்ப்பாடி பகுதியில் அரசு வங்கி, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வருவேன்.

இத்தொகுதியில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலை கொண்டு வருவேன் என பேசினார். அப்போது, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் அருணகிரி, கதிர் தண்டபாணி, நிர்வாகிகள் சின்னராஜ், வைத்தியநாதன், கதிர், காந்தி, அய்யப்பன், சலீம், சிவகுரு, வினோத்குமார், சந்தோஷ், பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் அமுதமொழி, ஒன்றிய செயலாளர்கள் ராஜேஷ், மணி, ஊராட்சி தலைவர் பழனி, பா.ஜ., மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய தலைவர்கள் வெள்ளைக்காரன், சின்னதுரை மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement