நீட் தேர்வுக்கு பயிற்சி அரசு பள்ளிகள் தீவிரம்

கோவை: நீட் தேர்வை அரசுப்பள்ளி மாணவர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் நீட் சிறப்பு மையங்களில்,தொடர்தேர்வுகள் மூலம் மாணவர்கள் தயார்ப்படுத்தப்படுகின்றனர்.

2026ம் ஆண்டிற்கான இளநிலை நீட் நுழைவுத் தேர்வு, வரும் மே 3ம் தேதி நடத்தப்படவுள்ள நிலையில், நடப்பாண்டு கோவை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 620 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ஐந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ராஜவீதி, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் காலை 9 முதல் மாலை 4 மணி முதல் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் பயிற்சி வழங்கப்படுகிறது. இயற்பியல், வேதியியில், தாவரவியல், விலங்கியல் என ஒவ்வொரு பாடமும், இரண்டு பாடவேளைகள் நடக்கும். முதல் நாள் எடுக்கப்பட்ட பாடங்களிலிருந்து தினமும் காலை 9 முதல் 9.30 மணி வரை தேர்வுகள் நடக்கும்.

வாரம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படுகிறது. பாடங்கள் ஒரளவு முடியும் போது, மாணவர்களுக்குமூன்று முழுத்தேர்வு நடத்தப்படும். மாதிரி நீட் தேர்வும் நடத்தப்படும். தேர்வுக்கு முந்தைய மே 2 வரை தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சியும், தேர்வுகளும் நடத்தப்பட்டு தயார்ப்படுத்தபடுவார்கள் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Advertisement