தேர்தல் விதி மீறியதாக இரு வழக்குகள் பதிவு
தளி, : கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேர்தல் விதி மீறியதாக இரு வழக்கு கள் பதிவு செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், அதிகாரி செல்வராஜ் தலைமையில், மதகொண்டப்பள்ளி பகுதியில் ரோந்து சென்ற போது, அப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப் அருகே, உரிய முன் அனுமதி பெறாமல், இ.கம்யூ., கட்சியின் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டிருப்பதை பார்த்தனர். இது தொடர்பாக, செல்வராஜ் புகார்படி, இ.கம்யூ., கட்சி உறுப்பினரான அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி லலிதா, 40, என்பவர் மீது, தளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல், மதகொண்டப்பள்ளியில் உள்ள சென்ன ருத்ரம்மா என்பவரது வீட்டின் சுவற்றில், உரிய முன் அனுமதியின்றி பா.ஜ., கட்சியின் தாமரை சின்னம் வரையப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, தனக்கு ஒன்றும் தெரியாது என சென்ன ருத்ரம்மா தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அடையாளம் தெரியாத பா.ஜ., நிர்வாகிகள் மீது, தளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும்
-
சட்டத்தின் பிடியில் இருந்து அசாம் முதல்வர் தப்ப முடியாது: ராகுல்
-
வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம்: விஜய் மேல்முறையீடு
-
ஓடி ஜெயிப்பதற்கு ஓட்டப்பந்தயமா: இது ஓட்டுப்பந்தயம் என்கிறார் சீமான்
-
நெல்லுக்கு ஊக்கத்தொகை விவகாரம்; கடிதத்தை வெளியிட்டு முதல்வருக்கு நிர்மலா பதிலடி
-
பாமகவில் ‛கண்ணாமூச்சி' ஆடும் அப்பாவும் மகனும்: கோபத்தில் தந்தை குதிக்கிறார்; பாசத்தில் மகன் தவிக்கிறார்: குழப்பத்தில் பாட்டாளி'கள்!
-
அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி