சட்டத்தின் பிடியில் இருந்து அசாம் முதல்வர் தப்ப முடியாது: ராகுல்
புதுடில்லி : '' நாட்டில் மிகவும் ஊழல்வாழ்ந்த நபராக அசாம் முதல்வர் உள்ளார். அவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது'', எனகாங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான பவன் கெரா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் மனைவி ரிங்கி புயான் யுஏஇ, எகிப்து, ஆண்டிகுவா ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் வைத்துள்ளார். துபாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவருக்கு சொத்துகள் உள்ளன என குற்றம்சாட்டினார்.
இதை முதல்வர் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, அவரது மனைவி ரிங்கி புயானும் மறுத்தனர். இது தொடர்பாக ரிங்கி புயான் அளித்த புகாரின்படி அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சில நாட்களுக்கு முன்னர், டில்லியில் நிஜாமுதீன் பகுதியில் உள்ள பவன் கெரா வீட்டில் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர். இந்த விவகாரத்தில் பவன் கெராவுக்கு தெலுங்கானா உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அசாம் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாட்டிலேயே மிகவும் ஊழல் மிகுந்த நபராக அசாமின் தற்போதைய முதல்வர் உள்ளார். சட்டத்தின் பிடியில் இருந்து அவர் தப்ப முடியாது. தனது அரசியல் எதிரிகள் மற்றும் விமர்சிப்பவர்களுக்கு எதிராக மாநில அரசின் இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவது அரசியலமைப்புக்கு எதிரானது.
அதிகாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு கூரல் ஆகியவை அரசியலமைப்பின் மாண்புகளுக்கு அடப்படையாக உள்ளது. பவன் கெராவுக்கு ஆதரவாக காங்கிரஸ் துணை நிற்கும். நாங்கள் பயப்பட மாட்டோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.
திருட்டு கும்பல் காங்கிரஸ்மேலும்
-
சதமடிக்கும் வெயில் மக்கள் பாதிப்பு
-
அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்
-
தி.மு.க.,வுக்கு பெண்கள் அமோக ஆதரவு: வால்பாறை தி.மு.க., வேட்பாளர் பெருமிதம்
-
பொரியல் தட்டை விலை உயர்வு
-
பைக்கில் சென்ற பெண்ணிடம் ஒரு சவரன் தங்க சங்கிலி பறிப்பு
-
மீண்டும் பஸ்கள் இயக்கக் கோரி துடியலுார் ஆர்.டி.ஓ., முற்றுகை