ஓடி ஜெயிப்பதற்கு ஓட்டப்பந்தயமா: இது ஓட்டுப்பந்தயம் என்கிறார் சீமான்

7


திண்டுக்கல்: இந்த தம்பி நல்லா பேசுறாரு; ஆனா ஜெயிக்க மாட்டேங்குறாரு என்று ஒரு அம்மா சொல்லி இருக்கிறது. இது என்ன ஓட்டப்பந்தயமா நானா ஓடி ஜெயிப்பதற்கு, இது ஓட்டு பந்தயம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: என் இனத்திற்கு ஒரு சாபம் இருக்கிறது; இதற்கு கடந்த கால காயமும் இல்லை; எதிர்கால கனவும் இல்லை. நிகழ்கால தேவை தான். '' சீமான் நல்ல தான் பேசுறான். ஒரு அம்மா சொல்லி இருக்கிறது.''இந்த தம்பி நல்லா பேசுறான்; ஆனால் ஜெயிக்க மாட்டேங்குறான். இது என்ன ஓட்டப்பந்தயமா நானா ஓடி ஜெயிப்பதற்கு, இது ஓட்டு பந்தயம்; போட்டால் தான் ஜெயிக்க முடியும்.

மக்கள் அனைவரும் சும்மா இருக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள்; இலவச மிக்சி கொடுத்துவிட்டால், அதில் எதை அரைப்பது? கிரைண்டரில் எதை ஆட்டுவது, பிரிட்ஜ் கொடுத்தால் அதில் எதை வைப்பது, உங்கள் வீட்டில் திருடிவிட்டு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வாங்குவீர்களா? ஆட்சியாளர்களிடம் மக்கள் கேள்வி கேட்காமல் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. நல்ல ஆட்சி கொடுத்திருந்தால் கூட்டணியும், இலவச அறிவிப்புகளும் தேவையில்லை. இவ்வாறு சீமான் பேசினார்.

Advertisement