வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம்: விஜய் மேல்முறையீடு
சென்னை: வருமான வரித்துரை ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய்,சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார்.
விஜய் நடித்த புலி படம், கடந்த 2015ல் வெளியானது. அதே ஆண்டு, செப்., 30ல் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது, புலி படத்தில் நடித்ததற்காக சம்பளமாக 16 கோடி ரூபாயை காசோலையாகவும், கூடுதலாக, 15 கோடி ரூபாயை பணமாகவும் பெற்றது தெரியவந்தது. இவற்றில் கூடுதல் தொகையான 15 கோடி ரூபாயை, விஜய் கணக்கில் காட்டாதது கண்டறியப்பட்டது. 15 கோடி ரூபாய் கூடு தல் வருமானத்தை மறைத்ததற்காக, 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்து, வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், விஜய் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி 'விஜய்க்கு அபராதம் விதித்து, உரிய கால அவகாசத்துக்குள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வருமான வரித்துறை அபராதம் விதித்த உத்தரவில், எந்த சட்டவிரோதமும் இல்லை. நீதிமன்றம் தலையிட எந்த காரணமும் இல்லை' என கூறி, விஜய் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளித்து இருந்தார்.
இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
விஜய் தனது மனுவில்,' தனது தரப்பு கருத்தை தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் சிக்கல்கள் உள்ளன. வருமானவரித்துறை, தனது வருமானத்தை புலி படத்தை பிறகு உள்ள வருமானத்தையும் குறிப்பிட்டு சேர்த்துள்ளனர். ஆனால், கால அவகாசம் வெவ்வேறாக உள்ளன. இந்த விவகாரத்தில் நிறைய சிக்கல்கள் உள்ளன. வேண்டுமென்றே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
இவருக்கு இனி மக்கள் வருமான வரி பாக்கி விஜய் என்றே அவர் எங்கு சென்றாலும் பெயர் வைக்கலாமே
இவன்... கன்னியாகுமரி பிரச்சாரத்துக்கு போறப்ப... சைக்கிள் ஓட்டிகிட்டே வந்தான்பா... பவுன்சிலர்கள் சூழ... ஆனால்... திடீர்னு ஒரே ஒரு தொண்டன்... தன் தலைவனாகிய இந்த விஜய்க்கு, பூ தூவிட கைகளில் பூ கொண்டு வந்து அவன் மேலே போட்டான்பா... இவன் டக்குன்னு “எடுத்தேன் பார் ஓட்டம்”...னு வடிவேல் காமெடில... அந்த தொண்டனைப் பார்த்துட்டு... சைக்கிளை கீழே போட்டுவிட்டு... எடுத்தான் பாரு ஓட்டம்...? அகில உலகத்திலேயே... தனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த தொண்டன பார்த்து... தலைதெறிக்க ஓடிய இப்படி ஒரு தலைவனை உலகமே கண்டதில்லை...? தொண்டனை பார்த்தே இவ்வளவு பயப்படுறானே... இவன் எங்க கட்சி நடத்தி... ஆர்ப்பாட்டம், போராட்டம், தடியடி, சிறைச்சாலை இதெல்லாம் பார்க்கப் போறான்...? இவனெல்லாம் சிஎம்... ஆகி... ஆட்சி செஞ்சி... என்னத்த கிழிக்கப் போறான்... இவன் ஒரு கிராம பஞ்சாயத்து வார்டு கவுன்சிலராக ஆகக்கூட தகுதியற்ற ஆளு...? இந்த மூஞ்சி முதலமைச்சருக்கு ஆசைபடுது...?
இவரு ஒரு ஊழல் அற்ற ஆட்சி கொடுக்கப் போறார் சரியா வரி கட்டல
இந்த வாய்தான்... “உச்சத்தை விட்டு... மக்களுக்கு நல்லது செய்ய வந்திருக்கு”.. இதே வாய்தான் நேத்து... “லஞ்சமில்லாத... ஊழலில்லாத... ஆட்சியை தரப் போறேன்”...ன்னு சொல்லுச்சு...
ஒரு சாதாரண மனிதன் இந்த மாதிரி வருமானத்தை மறைத்தால் அவனுக்கு 200% பெனால்டி மற்றும் சிறை தண்டனை கிடைத்து இருக்கும். ஊழலை, நேர்மையை பற்றி பேசும் இவர்களை போன்ற நபர்கள் எப்படி நேர்மையான ஆட்சியை தருவார்கள்.
வருமான வரி அதிகாரிகளே ரூ 15 கோடி கணக்கில் காட்டாததற்கு ரூ 1.5 கோடி அபராதம் மிக மிக தவறு அது 30% அதாவது ரூ 4.5 கோடியாக இருக்கவேண்டும் இது தவறு என்று தான் ஜோசப் விஜய் வருமானவரி கட்டவில்லை??என்ன ஜோசப் சரிதானே???ஆகவே உடனே ரூ 4.5 கோடி வரி கட்ட சொல்லுங்கள் ஜோசப் விஜயை வருமான வரித்துறையே ??உடனே அவர் வரி கட்டி இடுவார்.
வருமான வரி, தணிக்கை போன்ற துறைகள் பொது பணத்தை முறைபடுத்துபவை. அபராதம் 1.5 கோடி டெபாசிட் செய்த பின் தான் நீதிமன்றம் விஜயின் வழக்கை விசாரணைக்கு எடுக்க அதிகாரம். துறையின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க நீதிமன்றம் அதிகாரம் பெற்றது அல்ல. நிர்வாக அதிகாரம் மீது நீதிமன்றம் மேல் அதிகாரம் செலுத்த வழிமுறைகள் கடினமானவை. வழக்கறிஞர்கள் பெரும் தொகை பெற்றுவிடுவர். அதற்கு பதில் முழு வரி செலுத்தி விடுவது நல்லது.
யோக்கியன் வந்து நமக்கு நல்லது செய்வான். வரி கட்ட துப்பில்லை. மேல் முறையீடு
அண்ணே யாருக்கும் தெரியாம வெள்ளந்தியா காட்டிட்டு மற்றவர்களை தீயசக்தி என சொல்லிட்டு வீட்டில் கருப்பு பணத்தை சலீஸ்ஸா அமுக்கிட்டேன்களே ..இது எந்த கணக்குன்னே.. "புனிதநீர் தெளித்த தூயசக்தி பணமாண்ணே" ? சொல்லுங்க அண்னே இப்பவாச்சும் வாய துறந்து சொல்லுங்கண்ணே..
விஜய்யை வசைபாட நல்ல சந்தர்ப்பம்.