டீ, காபியுடன் சரி; எங்களை கண்டு கொள்வதில்லை தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் புலம்பல்
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் (தனி) தொகுதியில், அ.தி.மு.க., - சம்பத்குமார், தி.மு.க., - சண்முகம், த.வெ.க., -ராகேஷ், நா.த.க., - அனிதா உள்ளிட்ட, 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தி.மு.க., சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தி.மு.க., கூட்டணியில், காங்.,-வி.சி., - தே.மு.தி.க., - ம.தி.மு.க.,- சி.பி.எம்., - சி.பி.ஐ.,- கொ.ம.தே.க.,- ம.ம.க., -இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் முறையான அழைப்பு மற்றும் கவனிப்பு இல்லாததால், தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: வேட்பாளர் அறிமுக கூட்டம், ஆலோசனை கூட்டங்களுக்கு எங்களை அழைக்கின்றனர். அங்கு, ஒரு சால்வை அணிவித்து மேடையில் அமர வைக்கின்றனர். ஆனால், நாங்கள் எதிர்பார்ப்பது கிடைப்பதில்லை. எங்களுக்கு செலவாகிறது. கேட்டால் இப்போதுதான் அறிமுக கூட்டம் நடக்கிறது. இன்னும் பிரசாரம் ஆரம்பிக்கவில்லை. சரியான நேரத்தில் உங்களுக்கு பார்க்கப்படும் என கூறுகின்றனர். டீ, காபி மட்டும்தான் கொடுக்கின்றனர். சாப்பாடு கூட கொடுப்பதில்லை. கிராமங்களில் நடக்கும் பிரசாரத்திற்கு அழைப்பதில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும்
-
விமான நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் ரூ.4,000 கோடியில் உத்தரவாத திட்டம்
-
குறைந்து வரும் வங்கி டிபாசிட் அதிகரிக்க ஆர்.பி.ஐ., ஆலோசனை
-
புதிய அமைதி பேச்சுக்கு அமெரிக்கா நிபந்தனை
-
வர்த்தக ஒப்பந்த பேச்சு நடத்துவதற்கு அமெரிக்கா செல்கிறது இந்திய குழு
-
நாட்டின் ஏற்றுமதி ரூ.80 லட்சம் கோடி
-
எட்டாம் கட்ட போராட்டம் தோல்வி; தேர்தலில் தி.மு.க.,வுக்கு பாடம்: தொழில்முனைவோர் கூட்டமைப்பு அறிவிப்பு