பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு வருகிறது டில்லியில் தடை
புதுடில்லி: நாடு முழுதும் வாகன பெருக்கத்தால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தலைநகர் டில்லியில் குளிர்காலங்களில் வாகனங்களால் ஏற்படும் மாசு காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் டில்லி அரசு, 2026 - 2030ம் ஆண்டுக்கான புதிய மின்சார வாகன கொள்கையை வகுத்து, அதற்கான வரைவு அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்காக வைத்துள்ளது.
வரும் 2028ம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் வாகனங்களை படிப்படியாக தடை செய்யும் வகையில் இந்த வரைவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
டில்லி போக்குவரத்து துறை வெளியிட்ட இந்த வரைவு அறிக்கையில், வாகன புகையால் ஏற்படும் மாசை குறைக்க கடுமையான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அந்த வரைவு அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:
வரும் 2028, ஏப்., 1 முதல் புதிய பெட்ரோல் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் பதிவு செய்யப்பட மாட்டாது. இனி மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்.
வரும் 2027, ஜன., 1 முதல், மின்சார ஆட்டோக்கள் மட்டுமே புதிதாக பதிவு செய்யப்படும்.
பள்ளி பஸ்களும் படிப்படியாக மின்சார வாகனமாக மாற்றப்படும். 2030ம் ஆண்டுக்குள் 30 சதவீதம் அளவுக்கு மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு துறைகளின் பயன்பாட்டுக்காக இனி மின்சார வாகனங்களே கொள்முதல் செய்யப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, மின்சார வாகனத்தை வாங்க ஊக்குவிக்கும் வகையில் தாராள சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 2.25 லட்சம் ரூபாய் வரையிலான மின்சார டூ - வீலர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். ஒரு கிலோ வாட்டுக்கு 10,000 ரூபாய் என்ற வகையில், முதல் ஆண்டில் 30,000 ரூபாய் வரை வழங்கப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஊக்கத் தொகை படிப்படியாக குறைக்கப்படும்.
அதே போல், மின்சார ஆட்டோக்களுக்கு முதல் ஆண்டில் 50,000 ரூபாய் ஊக்கத் தொகை கிடைக்கும்; அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த ஊக்கத் தொகை குறைக்கப்படும்.
'என்1' பிரிவில் உள்ள மின்சார சரக்கு வாகனத்தை வாங்குவோருக்கு, முதல் ஆண்டில் 1 லட்சம் ரூபாய் வரை ஊக்கத் தொகை கிடைக்கும்.
பழைய வாகனங்களை மாற்றி, அதற்கு பதிலாக மின்சார வாகனங்கள் வாங்குவோரையும் ஊக்குவிக்கும் வகையில், 'ஸ்கிராப்' ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது.
'பி.எஸ்., 4' வகை டூ - வீலருக்கு பதிலாக மின்சார வாகனம் வாங்கினால் 10,000 ரூபாய் வழங்கப்படும். ஆட்டோ எனில் 25,000 ரூபாய் ஊக்கத் தொகை. அதுவே, 30 லட்சம் ரூபாய் வரையிலான பெட்ரோல் காரை மாற்றி, பேட்டரிக்கு மாற விரும்பினால் 1 லட்சம் ரூபாய் கிடைக்கும். சரக்கு வாகனங்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும். அடுத்த ஆறு மாதங்களில் அவர்கள் மின்சார வாகனங்களுக்கு மாறும் வகையில் இந்த தாராள ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மின்சார வாகனங்களுக்கான சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்திலும் 100 சதவீத விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், 30 லட்சம் ரூபாய் வரையிலான கார்களுக்கு முழு விலக்கு கிடைக்கும். பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்கும் 'ஹை ப்ரிட்' வகை கார்கள் எனில், 50 சதவீத விலக்கு மட்டுமே அளிக்கப்படும். 30 லட்சம் ரூபாய்க்கு மேல் விலையுள்ள கார்களுக்கு எந்த விலக்கும் அறிவிக்கப்படவில்லை.
பெட்ரோல், டீசலுக்கு பதிலாக மின்சார வாகனங்களை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதால், டில்லி முழுதும் அதற்கான சார்ஜிங் மையங்களை அமைப்பதற்கான உள்கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
அதாவது, அதிக இடங்களில் சார்ஜிங் மையங்கள் விரைவில் அமைக்கப்படவுள்ளன. இந்த திட்டத்தின் மூலம், மின் வாகன துறையில் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய பேட்டரிகளை சுழற்சி முறையில் கையாள, 'பேட்டரி சேகரிப்பு மையங்கள்' அமைக்கப்படும். இந்த வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் அளிக்கும் கருத்துகளுக்கு ஏற்ப இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
வாசகர் கருத்து (8)
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
12 ஏப்,2026 - 16:56 Report Abuse
பழைய பெட்ரோல் டீசல் வாகனங்களை பாட்டரி மோட்டார் வாகனமாக மாற்றுவதற்கு அனுமதி கொடுத்தால் வாகன உரிமையாளர்கள் பயன் அடைவார்கள் . 0
0
Reply
மணி சேகரன் - ,
12 ஏப்,2026 - 14:45 Report Abuse
சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கும் பூமி வெப்பமயம் ஆவதற்கும் சாலை விரிவாக்கம் செய்வதற்காக வெட்டப்படும் லட்சக்கணக்கான மரங்களின் இழப்பு ஒரு முக்கிய காரணமாகும். பாமரர் முதல் மிகப் படித்த உயர்ந்த நபர்கள் வரை மரங்கள் அழிக்கப்பட்டதை யாரும் ஒரு காரணமாக கருதவில்லை. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
12 ஏப்,2026 - 12:26 Report Abuse
மின்சார வாகனங்களினால் மாசு கட்டுப்பாட்டுடன் இருக்கும். ஆனால் மின்சாரம் என்ன குறைந்த விலையில் கிடைக்குதா? 0
0
ஜெகதீசன் - ,
12 ஏப்,2026 - 12:57Report Abuse
மின்சார வாகனங்களுக்கு தேவையான மின்சாரமானது நிலக்கரி, எண்ணை மற்றும் எரிவாயு மூலமாகவே 50% உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ளனும். 0
0
Reply
ஜெகதீசன் - ,
12 ஏப்,2026 - 12:15 Report Abuse
டெல்லி கடல் பகுதியிலிருந்து மிகவும் உள் பகுதியில் இருப்பதால் கடல் காற்று, நில காற்று என தினமும் மாறி மாறி வீசாது. இது ஒரு பிரச்சினை. அடுத்து தொழிற்சாலை, குப்பை எரிப்பு, வாகன புகை என காற்று மாசுபடுகிறது. இது போக பக்கத்து மாநிலங்களில் விவசாய கழிவு எரிப்பது மிக பெரிய பிரச்சனை. தொழிற்சாலை மாசு கட்டுப்பாட்டில் நேர்மையான நடவடிக்கை தேவை, அங்கு அதற்கான சாதனங்கள் பொருத்தி இருக்கனும். விவசாய கழிவுகளை பயோமாஸ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொண்டு செல்வதில் இன்னும் ஒருங்கிணைப்பு தேவை, இரண்டு மகசூலுக்கு இடையே குறுகிய காலமே இதை நீக்க கிடைப்பதால், விவசாயிகள் அதை எரிக்கிறார்கள். அடுத்து இந்தியா முழுவதுமான பிரச்சினை, கார்ப்பரேஷன் குப்பை பெரும்பாலும் எரிக்கப்படுவது. வாகனங்கள் BS VI ஸ்டாண்டர்ட் மட்டுமே டெல்லியில் உள்ளது, பிறகென்ன. 0
0
Reply
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
12 ஏப்,2026 - 10:18 Report Abuse
மின்சார வாகனங்களை அதிக இடங்களில் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படும்
மின்சார சார்ஜ் மையங்களும் அதிக இடங்களில் தேவைப்படும் சிரமம்தான்...
இரா.குமரேசன். 0
0
Reply
Premanathan S - Cuddalore,இந்தியா
12 ஏப்,2026 - 10:13 Report Abuse
ரொம்ப நல்லது மாட்டு வண்டி, குதிரை வண்டிதான் மனிதர்களுக்கும் பாதுகாப்பு சுற்றுப் புறத்திற்கும் பாதுகாப்பு 0
0
Reply
veeramani - karaikudi,இந்தியா
12 ஏப்,2026 - 09:25 Report Abuse
செட்டிநாட்டில் வசிக்கும் மய்ய அரசின் தலைமை விஞ்ஞானியின் வேண்டுகோள் .
எல்நினோ ....வருகின்ற இளைய தலைமுறைக்கு இதை சொல்லியே ஆகவேண்டும். பூமியில் காற்றில் கார்போண்டைஆக்ஸிடே அதிகம் சென்றதால் பூமியின் உள்வட்ட காற்று வெப்பமடைகிறது. இதனால் பசிபிக் அட்லாண்டிக் ஆர்டிக் கடல்களின் நீரோட்டங்கள் வழி தடம் மாறுகிறது. இதனால் ஒருசில இடங்களில் மிக அதிக மழை பொழுவு நடக்கிறது. வெய்யில் காலங்களில் வெப்பம் மிக கடுமையாகிறது. இதனால் பூமியில் மனிதர்கள் அட்ஜஸ்ட் செய்யமுடிகிறது. ஆனால் சில உயிரினங்கள் ஊர்வன பரப்பன ஓடுவான் இதில் மாட்டிக்கொண்டு அழிந்து வருகிறது.
ஒரே இடத்தில் சுமார் 1020சென்டிமீட்டர் மழை பொழிவு இருக்கிறது .
நிறுத்த ஒரே வழி ...
இந்தியாவில் டீசல் மாற்று பெட்ரோல் வாகனங்களை உற்பத்தி செய்வதை 50 சதவீதம் நிறுத்தவேண்டும். வேலை வாய்ப்பு போனாலும் பரவாயில்லை
டீசல் வண்டிகளை மும்பை, கொல்கத்தா, லக்னோ பெங்களூரு சென்னை போன்ற பெரிய நகரங்களில் ஓடுவதை நிறுத்தியே ஆகவேண்டும். பல நகரங்களில் ஆட்டோ ஓடுவதையும் நிறுத்தவேண்டும்.
ஒரு வருடம் சில பிரச்சினை எழலாம் ஆனால் மக்களின் காற்று தண்ணீர் பாதுகாக்கப்படலாம் இந்த பிரச்சினை டெல்லிக்கு மட்டும் இல்லை. அனைத்து இந்திய மாநகராட்சிகளுக்கும் கட்டாயம் செயல்படுத்தப்படவேண்டும்.
நமது பேரன் பேத்திகளுக்கு மாசடையாத பூமியை நாம் விட்டுச்செல்லவேண்டும் 0
0
Reply
மேலும்
-
100 மார்க் வேணுமா; பூஜ்யம் வேணுமா! வேட்பாளர் சபரி கார்த்திகேயன் கேள்வி
-
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் தாராபுரம் தி.மு.க. வேட்பாளர் உறுதி
-
முதியோர்களிடம் ஏப்., 15,16ல் தபால் ஓட்டுகள் பெற ஏற்பாடு
-
சீமானுக்கு மதுபிரியர்கள் எதிர்ப்பு
-
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்த கப்பலையும் அனுமதிக்க மாட்டோம்: டிரம்ப்
-
விருதுநகரில் வியாபாரிகளுக்கு உதவியாக லாரிகள் முனையம் அமைக்கப்படும் அ.தி.மு.க., வேட்பாளர் வி.ஜி.கணேசன் உறுதி
Advertisement
Advertisement