சிறுமி பாலியல் பலாத்காரம் தாயார் உட்பட 4 பேருக்கு சிறை
சிவகங்கை: சிவகங்கையை சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர், கண்டுகொள்ளாமல் இருந்த தாயாருக்கு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரை சேர்ந்த சேர்ந்த 10 வயது சிறுமி, திருச்சியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். உறவினரான அக்பர் அலி 65, வீட்டில் 3 மாதம் தங்கினார்.
அப்போது சிறுமியை மிரட்டி அக்பர் அலி பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமி தாயிடம் கூறியபோது பொய் சொல்வதாக நினைத்து அவர் கண்டுகொள்ளவில்லை. 2021 வரை அக்பர் அலி சிறுமியை மிரட்டி பல முறை பலாத்காரம் செய்தார்.
ஜெயங்கொண்டத்தை சேர்ந்த சரவணன் 36, திருப்புத்துாருக்கு வந்து சிறுமியின் தாய் இல்லாத நேரம் பார்த்து அவரை பலாத்காரம் செய்தார். நடந்ததை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார்.
சிறுமியின் தாய்க்கு தெரிந்த பட்டுக்கோட்டையை சேர்ந்த முருகேசன் 50, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரைக்கு சிறுமியை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்தார். இதையும் தாயார் கண்டுகொள்ளாததால் பக்கத்து வீட்டு பெண்ணிடம் நடந்ததை கூறி சிறுமி அழுதுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அக்பர் அலி, சரவணன், முருகேசன், சிறுமியின் தாயாரை திருப்புத்துார் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
விசாரணை சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. அக்பர் அலிக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15,000 அபராதம் விதித்து நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பளித்தார். சரவணனுக்கு 20 ஆண்டுகள் சிறையும், ரூ.10,000 அபராதமும், முருகேசனுக்கு 25 ஆண்டுகள் சிறையும் ரூ.11,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
மகள் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்தும் புகாரளிக்காத தாய்க்கு 95 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கு உடந்தையாக இருந்த அக்பர் அலி மனைவிக்கு ரூ.10,000 அபராதம் விதித்த நீதிபதி, சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் தனலட்சுமி ஆஜரானார்.
மேலும்
-
'மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி உறுதி: 50 ஆயிரம் ஓட்டில் சூலூரில் வெற்றி'
-
ஓட்டுப்பதிவுக்காக தயாராகும் அதிகாரிகள்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
-
ஆனைமலையில் கலைக்கல்லுாரி :தி.மு.க., வேட்பாளர் சுதாகர் உறுதி
-
சோற்றுத்துறை நாதர் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யானம்
-
பறக்கும் படை பணிகள்: தேர்தல் பார்வையாளர் ஆய்வு
-
சின்மய அமிர்த யாத்திரை ரதம் ; உடுமலைக்கு வருகை