கோடை பயிற்சி முகாம் மாணவர்களுக்கு அழைப்பு

சென்னை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாணவ - மாணவியருக்கான கோடை கால பயிற்சி முகாம், சென்னையின் பல்வேறு இடங்களில், வரும் 17ம் தேதி துவங்க உள்ளது.

இதில், 18 வயதுக்குட்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்கலாம் என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த பயிற்சி முகாம், தினமும் காலை மற்றும் மாலையில் நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்கும் மாணவ - மாணவியருக்கு பால், முட்டை போன்ற ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது.

இந்த முகாமில், விளையாட்டு வல்லுநர்களைக் கொண்டு, இளம் திறமையாளர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான வழிமுறைகள் செய்து தருவதாக, அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் பங்கேற்கும் அனைத்து மாணவ - மாணவியருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல் அறிய, 95140 00777 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement