போஸ்டர் நண்பர்களுடன் சேர்ந்து கணவரை தாக்கிய மனைவி கைது
சென்னை:பிரிந்து வாழும் கணவரை, ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய மனைவி கைது செய்யப்பட்டார்.
வியாசர்பாடி ஜோதி ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் அன்பழகன், 36. இவர், தன் தாய் மாலதி, 55, மற்றும் இளைய மகனுடன் வசித்து வருகிறார். கொளத்துாரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்க்கிறார்.
இவருக்கும், காவாங்கரையை சேர்ந்த ரமீஜா பானு, 34, என்பவருக்கும், கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர்.
தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இருவரும், ஒவ்வொரு மகனுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 10ம் தேதி நள்ளிரவு, அன்பழகன் வீட்டுக்கு தன் நண்பர்கள் விக்கி மற்றும் நவீன் ஆகியோருடன் சென்ற ரமீஜா பானு, இளைய மகனை தன்னுடன் அனுப்புமாறு கேட்டு தகராறு செய்துள்ளார்.
அப்போது, மூவரும் சேர்ந்து அன்பழகனை தாக்கியுள்ளனர். தடுக்க வந்த மாலதியையும் தாக்கி விட்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவரும் தந்த புகாரின்படி, செம்பியம் போலீசார் வழக்குப்பதிந்து, ரமீஜாபானுவை கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.
மேலும்
-
பா.ஜ. வேட்பாளருக்காக வீடு வீடாக பிரசாரம்
-
தமிழகத்தின் உற்பத்தி துறையில் கோவையின் பங்கை 25 சதவீதமாக உயர்த்திக் காட்டுவோம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி
-
'மக்கள் திட்டங்களை செயல்படுத்த தவறியவர்கள் அ.தி.மு.க.,வினர்'
-
போதைப் பொருட்கள் இல்லாத சிங்காநல்லுாரே எனது நோக்கம் :உறுதியளிக்கிறார் அ.தி.மு.க.ஜெயராம்
-
சூழ்ச்சி என்றும் வெல்லாது... தர்மம் வெல்லும்: டி.ஆர்.எஸ்.
-
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு துவங்கியது ஓட்டுப்பதிவு!