பயன்பாடற்ற ஆன்மிக பொருட்களுக்கு கண்ணியமாக விடை தரும் நிகழ்ச்சி

மயிலாப்பூர்;வீடுகளில் தேங்கியுள்ள பயன்பாடு இல்லாத ஆன்மிகப் பொருட்களுக்கு, கண்ணியமாக விடை கொடுக்கும், 'உத்வசேனா' அமைப்பின் நிகழ்ச்சி, மயிலாப்பூரில் இன்று காலை நடக்கிறது.

வழிபாட்டு பொருட்களை கழிவுகளாக கருதாமல், அவற்றை மீண்டும் இயற்கையோடு இணைக்கும் பணியை உத்வசேனா எனும் தன்னார்வலர்கள் அமைப்பு செய்து வருகிறது.

கோவில்கள் மற்றும் வீடுகளில் பூஜிக்கப்பட்ட மலர்களைச் சேகரித்து, அவற்றை உரமாக்குதல்; வீதிகளிலோ அல்லது மரத்தடிகளிலோ கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் கடவுள் படங்களைச் சேகரித்து, அவற்றை முறைப்படி அக்னி சம்ஸ்காரம் செய்தல் அல்லது மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட பணிகளை, இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

இந்த அமைப்பின் சார்பில் இதுவரை, 30 டன் ஆன்மிக பொருட்களுக்கு கண்ணியமான விடை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மயிலாப்பூர், டி.வி.ஆர்., சுப்பி செட்டி வசந்த மண்டபத்தில், இன்று காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை, வீடுகளில் பயன்பாடு இல்லாத ஆன்மிக பொருட்களை சேகரிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதை நிகழ்வை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

**

Advertisement