ரயில்வே பாலத்தில் குளம் போல் தேங்கும் மழைநீரால் அவதி

பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடியில், ரயில்வே பாலத்தின் கீழ் குளம் போல் தேங்கும் மழை நீரால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.


தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த பழைய ஒட்டுப்பட்-டியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்ப-குதியில் கார்மென்ட்ஸ், கால்நடை மருத்துவமனை, தனியார் நிறு-வனங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பொம்மிடிக்கு, ரயில்வே தரை பாலம் வழியாக சென்று, தர்மபுரி ரோட்டை கடந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் மக்கள் மழை காலத்தில் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ரயில்வே தரை பாலத்தில் நீர் கசிவு ஏற்படுவ-தாலும், தாழ்வான பகுதி என்பதாலும் தரை பாலத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. பலமுறை ரயில்வே நிர்வாகத்-திற்கு புகார் அளித்தும், மழை நீரை அகற்ற நடவடிக்கை இல்லை.
இவ்வழியாக பல்வேறு பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், ரயில்வே பணிக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், பொதுமக்கள் என, 1,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ரயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் கசிவு ஏற்படுவதை தடுக்கவும், தேங்கும் நீரை வெளியேற்றவும், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement