மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள தண்டுகாரன-ஹள்ளியில் டாஸ்மாக் கடையில், காலி மது பாட்டில்களை வாங்-குவதற்காக, தினக்கூலி அடிப்படையில் சிலர் வேலை செய்து வருகின்றனர்.
இதில், சூடப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாதேஷ், 45, என்பவர் நேற்று பணியில் இருந்தார். மாலை, 5:00 மணிக்கு டாஸ்மாக் கடைக்கு மதுபான பாட்டில் லோடு லாரியில் வந்தது. இதனை ஊழியர்களுடன் மாதேஷூம் சேர்ந்து இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக சரக்கு லாரியின் மீது மின்கம்பி உரசியது. இதில், மின்சாரம் லாரியில் பாய்ந்து லோடு இறக்கும் பணியில் ஈடுபட்ட மாதேஷை தாக்கியதில், அவர் துாக்கி வீசப்-பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மகேந்திரமங்கலம் போலீசார், மாதேஷ் சடலத்தை கைப்பற்றி, தர்மபுரி அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திரிணமுல் கட்சிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு; ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து
-
சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் வறண்டன:கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிப்பு
-
'பேட்மேன்' முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!
-
ஓட்டு எண்ணும் மையத்தின் பிற வழிகள் அடைப்பு
-
வரட்டுபள்ளத்தில் 9.60 மி.மீ., மழை
-
8 தொகுதியில் களத்தில் உள்ள 118 வேட்பாளர்
Advertisement
Advertisement