குளிர்பான கடைகளில் ஆய்வு
பென்னாகரம்: பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த-கோபால் தலைமையிலான குழுவினர், பென்னாகரம், வண்ணாத்-திப்பட்டி, எட்டியாம்பட்டி, கடமடை, கலப்பம்பாடி, பெரும்-பாலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஐஸ், ஐஸ்கிரீம் தயாரிப்பு மற்றும் குளிர்பானங்கள் வினியோகம், விற்பனை நிலையங்கள் மற்றும் பழக்கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது பொருட்களின் தயாரிப்பு தேதி, முடிவு தேதி, பேட்ச் எண், உணவு பாதுகாப்பு உரிம எண் போன்ற விபரங்கள் உரிய முறையில் அச்சிடப்பட்டுள்ளனவா என்றும், ஐஸ், ஐஸ்கிரீம் இருப்பு, சுற்றுப்புற சுகாதாரம் கண்காணிக்கப்பட்டது. சுத்திக-ரிக்கப்பட்ட குடிநீரா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள, மொத்த குளிர்-பான விற்பனை நிலையத்தில், உரிய விபரங்கள் இல்லாத ஐஸ் டியூப்களை அப்புறப்படுத்தினர். மேலும் அந்த நிறுவனத்துக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும்
-
திரிணமுல் கட்சிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு; ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து
-
சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் வறண்டன:கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிப்பு
-
'பேட்மேன்' முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!
-
ஓட்டு எண்ணும் மையத்தின் பிற வழிகள் அடைப்பு
-
வரட்டுபள்ளத்தில் 9.60 மி.மீ., மழை
-
8 தொகுதியில் களத்தில் உள்ள 118 வேட்பாளர்