ராமேஸ்வரம் கோயில் தீர்த்த பாதை ரூ.2.10 கோடியில் புதுப்பிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.10 கோடியில் பக்தர்கள் புனித நீராட செல்லும் தீர்த்த பாதையை புதுப்பிக்கும் பணி நடக்கிறது.

இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இதில் நீராடும் வழியில் டைல்ஸ்கள் உள்ளதால் பாசிபடிந்து இடறி விழுந்து காயமடைந்தனர்.

மேலும் 2ம் பிரகாரம் 100 மீ., முழுமை பெறாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. பக்தர்கள் நலன் கருதி தீர்த்த பாதையை புதுப்பிக்க ரூ.2.10 கோடியை ஹிந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கியது.

இதையடுத்து சில நாட்களாக தீர்த்த பாதையில் உள்ள டைல்ஸ் கற்களை அகற்றி பக்தர்கள் வழுக்கி விழாதபடி பெரிய சைஸில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. மேலும் முழுமை பெறாத 2ம் பிரகார பகுதியில் 100 அடிக்கு அகற்றி நீராடும் பகுதியில் மேல்தளம் இன்றி காற்றோட்டத்துடன் அமைக்கும் பணி நடக்கிறது.

இப்பணி ஓரிரு வாரத்தில் முடிந்ததும், பக்தர்கள் சிரமம் இன்றி நீராடலாம் என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement