ராசிபுரம் அருகே அடுத்தடுத்து விபத்துசுற்றுலா பயணிகள் 25 பேர் படுகாயம்


ராசிபுரம்ராசிபுரம் அருகே, ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் சுற்றுலா பயணிகள், 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த, 15க்கும் மேற்பட்டோர், தேனி மாவட்டத்தில் உள்ள மளிகை கருப்பசாமி கோவிலுக்கு வேனில் சென்றனர். அங்கு தரிசனம் முடிந்து, நேற்று முன்தினம், ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பாய்ச்சல் அருகே, நேற்று அதிகாலை வேன் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த மற்றொரு வேன் மீது மோதியது. அதை தொடர்ந்து, அடுத்தடுத்து, மூன்று சரக்கு வேன்கள் மோதின. இந்த விபத்தில் கருப்ப
சாமி கோவிலுக்கு சென்று திரும்பிய வேனில் இருந்த, ஐந்து பெண்கள் உட்பட, 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மெயின் ரோட்டில் இருந்து புறவழிச்சாலை வழியாக வாகனங்களை அனுப்பி வைத்தனர். அப்போது, அந்த வழியாக பழனியில் இருந்து வேலுார் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன், அங்கு நின்றிருந்த சரக்கு வாகனம் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், வேனில் பயணம் செய்த வேலுாரை சேர்ந்த, 12 பேர் படுகாயமடைந்தனர். அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துகளில், மொத்தம், 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக நாமக்கல், ராசிபுரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement