ராஜம்மாள் தேவதாஸ் நினைவு சொற்பொழிவு

கோவை: அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில், டாக்டர் ராஜம்மாள் பி.தேவதாஸ் 24வது ஆண்டு சொற்பொழிவு நடந்தது. அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மற்றும் வேந்தர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார்.

டெல்லி, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் தலைமை இயக்குனர் கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு 24வது ஆண்டு சொற்பொழிவு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அவர் பேசுகையில், '' ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து, விண்வெளி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான உணவு ஆராய்ச்சியில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். கழிவுப் பொருட்களிலிருந்து பயனுள்ள பொருட்களை உருவாக்கி 'சுழற்சி பொருளாதாரத்தை' மேம்படுத்த வேண்டும், '' என்றார்.

அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் துணை அறங்காவலர் கவுரி, துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர்,பதிவாளர் இந்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.





புட்நோட்: டாக்டர் ராஜம்மாள் பி.தேவதாஸ் 24வது ஆண்டு சொற்பொழிவு விருது டெல்லி, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் தலைமை இயக்குனர் கலைச்செல்விக்கு வழங்கப்பட்டது.

Advertisement